ஸ்பாட்லைட் உள்ளடக்கத்தின் சிறந்த நடைமுறைகள்

ஸ்பாட்லைட்டின் மிகவும் பிரபலமான வகைகளுக்கான சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை எப்படி உருவாக்குவது என்பதற்கான சில உதவி குறிப்புகள் இதோ:

நகைச்சுவை, குறும்புகள், தோல்விகள், மற்றும் மீம்கள்

  • உடனடியாக முகவுரையை அமைக்கவும்

  • கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தவும், சூழலை நிறுவவும் உரையைப் பயன்படுத்தவும்

  • ஆக்கப்பூர்வ அமைப்புகள் மற்றும் அசல் யோசனைகள் ஊக்குவிக்கப்படுகிறது

  • சுவாரஸ்யமான கோணங்கள் மற்றும் இடங்களைப் பதிவு செய்யவும்

  • தனித்துவமான திறமைகள் மற்றும் திறன்களைக் காட்டவும்

உணவு

  • அதைப் பாப் ஆகச் செய்யுங்கள்: பிரகாசமான, தெளிவான வண்ணங்களைக் கொண்டுள்ளவை, மேலும் உங்களின் பொருளை வலியுறுத்துகின்ற பின்னணியைத் தேர்வு செய்யவும்- கான்ட்ராஸ்டான நிறம், நல்ல அமைப்பு முறை, அல்லது மற்ற உணவுகளும் கூட!

  • பயனுள்ள தகவலுடன் விளக்கமளிக்கும் உரையைச் சேர்க்கவும்

  • முக்கிய உணவுக்குச் செல்லவும் அதுவும் முடிந்த அளவு குறைவான அறிமுகத்துடன் விரைவாக

திருப்திகரமானது மற்றும் ASMR

  • நீங்கள் காட்சிகளை வேகப்படுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்றாலும், தொடக்கத்திலிருந்து நிறைவு வரை திருப்திகரமான காட்சிகள் அல்லது ASMR ஒலிகள் முழுமையாக வழங்க வேண்டும்

  • உங்கள் வீடியோவின் பொருளைத் தெளிவாகவும் முழுச் சட்டகத்துடனும் சிறிய அளவு திசை திருப்பலுடன் காட்டவும்

  • புதுமை என்பது முக்கியமானதாகும். பொதுவான, எளிதில் அணுகக்கூடிய, அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

  • திருப்திகரமான உள்ளடக்கத்திற்கு இசை உதவிகரமாக இருக்கக்கூடும், ஆனால், கூடுதல் ஆடியோவுடன் ASMR -ஐ மூழ்கடிக்காமல் இருப்பது முக்கியமாகும்

பயிற்சிகள், DIY, கலை மற்றும் கைவினைப்பொருட்கள்

  • பார்வையாளர்கள் எதைப் கற்றுக்கொள்ள உள்ளனர் என்பதை பற்றி அவர்களுக்கு வாய் வழியாக அல்லது உரை மூலம் கூறுவதன் மூலம் கருத்தை உடனடியாக அறிமுகம் செய்யவும்

  • அனைத்தையும் உடனடியாகக் கூற வேண்டாம்! இறுதி தயாரிப்பு அல்லது முடிவை இறுதியில் ஒரு நாடகத்தன்மையுள்ள வெளிப்படுத்தலுக்காகச் சேமித்து வைக்கவும் (வெகு விரைவில் வெளிப்படுத்தினால் பலர் ஆரம்பத்திலேயே வெளியேறக்கூடும்)

  • பிரகாசமான, வண்ணமயமான பொருள்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான அமைப்புகள் இடம்பெற செய்யுங்கள்

  • அசல் யோசனைகள் மற்றும் புதுமையான முறைகளை முதன்மையாக்கவும். உங்களின் தனித்துவமான திறன்கள் அல்லது திறமைகளைக் காட்டுவதற்கு இது சரியான நேரம் ஆகும்! 

  • நீங்கள் பின்னணி இசையைச் சேர்த்தால், முக்கிய தருணங்களை ஆடியோ டிராக்கில் மாற்றங்களுடன் ஒத்திசைவு செய்யவும்

  • ஆரம்பம் முதல் இறுதி வரை முழுச் செயல்முறையையும் காட்டவும், எனவே, பார்வையாளர்கள் தேவையான வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளலாம், மேலும் அறிவுறுத்தல்களை சேர்க்க மறக்காதீர்கள்.

ஒப்பனை சாதனங்கள் மற்றும் அழகு

  • உங்களின் பார்வையாளர்கள் முழு எஃபக்டையும் பெற அனுமதிப்பதற்காக முழு முகத்தையும் காட்டவும்

  • பெரிதாக செய்யவும்! வியத்தகு எஃபக்ட்கள் இந்தப் பிரிவில் சிறப்பாகச் செயல்பட முடியும், குறிப்பாக அவை பிரகாசமான, தெளிவான வண்ணங்களைக் கொண்டிருக்கும் போது

  • பின்னணி இசை இந்த வகை உள்ளடக்கத்திற்கு பலவற்றை சேர்க்கிறது

நடனம் மற்றும் சவால்கள்

  • நடனம் மற்றும் சவால் வீடியோக்கள் பங்கேற்பு சார்ந்த அனுபவங்களாகும்: சலிப்பு மிகுந்ததாக அல்லது எளிமையானதாக நீங்கள் இருக்க விரும்பவில்லை என்றால், எளிதாகப் பிரதி எடுக்கப்படக்கூடிய Snapகள் கேளிக்கையில் இணையப் பார்வையாளர்களுக்கு உதவுகிறது

  • அதற்கு ஒரு பெயரை வழங்குவது அல்லது விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் உங்களின் சவாலை உடனடியாக அமைக்கவும்

  • புதிய ஸ்பாட்லைட் டிரெண்டைத் தொடங்குவதற்காக உங்களின் அசல் நடன வழக்கங்கள் அல்லது சவால்களைக் கொண்டுவரவும்