ஸ்பாட்லைட் 101
தூண்டப்பட்டு உங்கள் படைப்பாற்றலைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஸ்பாட்லைட் என்றால் என்ன?
ஸ்பாட்லைட், பயனர்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கத்திற்கான எங்களின் பொழுதுபோக்கு தளமாகும். படைப்பாளர்கள் பரந்த Snapchat சமூகத்திற்கு வெளிப்பாட்டைப் பெற இது சிறந்த வழியாகும். உங்களைப் பின்தொடர்பவர்கள் எத்தனை பேர் இருந்தாலும் சரி, உங்களைப் போன்ற ஆக்கப்பூர்வமானவர்களிடமிருந்து தரமான உள்ளடக்கத்தை ஸ்பாட்லைட் முதன்மைப்படுத்துகிறது. 
உங்களின் கேமரா சுருளிலிருந்து வீடியோக்களை ஸ்பாட்லைட் ஆதரிக்கிறது, ஆனால் Snapchat கேமராவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Snapகளை முதன்மைப்படுத்துகிறது.
வீடியோக்களை உருவாக்கிய பின்னர், பின்வருவன போன்ற கருவிகளைப் பயன்படுத்தி அவற்றைத் திருத்தவும்:
  • தலைப்புகள்
  • உரிமம் பெற்ற இசை
  • அசல் ஒலி பதிவுகள்
  • லென்ஸஸ்
  • GIFகள்
சிறந்த ஸ்பாட்லைட் Snapகளை உருவாக்கும் படைப்பாளர்களுக்காக Snap ஒரு மாதத்திற்குப் பல மில்லியன் கிடைக்கச்செய்கிறது, எனவே ஆக்கப்பூர்வமாகி வெகுமதியைப் பெறுங்கள்!
சமர்ப்பிப்பின் சிறந்த நடைமுறைகள்
  • Snapகள், 60 நொடிகள் வரை நீளம் உள்ள, ஒலியுடன்கூடிய செங்குத்தான வீடியோவாக இருக்க வேண்டும்
  • வீடியோ முழுப் திரையையும் நிரப்ப வேண்டும் (லெட்டர் பாக்ஸிங் அல்ல)
  • அசைவில்லாப் புகைப்படங்கள் மற்றும் கிடைமட்டமான, மங்கலான, அல்லது எழுத்து மட்டும் உள்ள Snapகள் ஸ்பாட்லைட்டில் தோன்றாது
  • அசல் உள்ளடக்கத்தைப் பதிவேற்றவும்—மற்ற செயலிகளிலிருந்து வரும் நீர்குறியீடப்பட்ட வீடியோக்கள் ஸ்பாட்லைட்டை விட்டு வடிகட்டப்படும்
உங்களின் Snapகளுக்கு #தலைப்புகளைச் சேர்க்கவும்
உங்களின் உள்ளடக்கத்தைக் கண்டுபிடித்துப் பகிரவும், உங்களுடையது போன்ற அதிக Snapகளை எக்ஸ்ப்ளோர் செய்ய மற்ற Snapchatters-க்கு #தலைப்புகள் உதவுகிறது. ஸ்பாட்லைட் வீடியோவில் கீழே இடது மூலையில் உள்ள #தலைப்பை நீங்கள் தட்டும்போது, அதைப் பயன்படுத்தும் அனைத்து வீடியோக்களையும் உங்களால் பார்க்க முடியும். 
உங்களின் வீடியோக்கு ஒரு #தலைப்பைச் சேர்க்க, முதலில் உங்களின் Snap-ஐ பதிவு செய்யவும், பின்னர் 'ஸ்பாட்லைட்டுக்கு பகிர்' என்பதைத் தட்டி ஒரு விவரிப்பு அல்லது #தலைப்பை 'அனுப்புக' திரையில் சேர்க்கவும். ஹாஷ்டாக்கைப் பயன்படுத்துவது நீங்கள் உள்ளீடும் செய்யும்போது ஏற்கனவே உள்ள #தலைப்புகளை எடுத்து வரும், அல்லது நீங்கள் சொந்தமாகவும் உருவாக்கலாம்.
 
எது டிரெண்டிங்கில் உள்ளது என்று பார்க்கவும்
ஸ்பாட்லைட்டில் சமீபத்திய டிரெண்ட்கள் பற்றிய சிந்தனைகளைப் பெறுங்கள். டிரெண்டிங்கில் உள்ள #தலைப்புகள், லென்ஸஸ், மற்றும் ஒலிகள் அனைத்தையும் பார்ப்பதற்காக ஸ்பாட்லைட் திரையின் மேல் வலது மூலையில் மேல் நோக்கிய அம்புக்குறி படவுருவைத் தட்டவும்.