ஸ்பாட்லைட்டில் எவ்வாறு சமர்ப்பிப்பது
அதிக அளவு (மற்றும் ஆதரவான) பார்வையாளர்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புக்காக ஸ்பாட்லைட்டில் உங்களின் Snapகளைப் பகிரவும்:
உங்களின் தொலைபேசியில்
உங்களின் Snap -ஐ பதிவு செய்து ஏதாவது ஆக்கப்பூர்வக் கருவிகள் அல்லது திருத்தங்களைச் சேர்க்கவும். அனுப்புக பொத்தானைத் தட்டி 'அனுப்புக' திரையின் மேலே உள்ள 'ஸ்பாட்லைட்டை' தேர்வு செய்யவும்.
இணையத்தில்
உங்களுடைய Snapchat கணக்கில் உள் நுழைந்து, விரைவான மற்றும் எளிதான சமர்ப்பிப்புகளுக்கு இணையப் பதிவேற்றக் கருவியைப் பயன்படுத்தவும்.
CH_035.png
ஸ்பாட்லைட் வெற்றிக்கான பயன் தரும் குறிப்புகள்
  • ஆக்கப்பூர்வமாக இருங்கள்! லென்ஸஸ், ஒலிகள், மற்றும் GIFகள் போன்ற கருவிகளை இணைக்கவும்
  • அனைத்து வீடியோக்களும் செங்குத்தாக இருக்க வேண்டும், 60 விநாடிகள் நீளம் வரை இருக்கலாம்
  • பதிப்புரிமை மீறலைத் தவிர்ப்பதற்காக Snapchat-இன் நூலகத்திலிருந்து மட்டும் இசையைப் பயன்படுத்தவும்
  • காலவரிசையை முயற்சிக்கவும், இது பல க்ளிப்களைப் பதிவு செய்து அவற்றை ஒன்றாக இணைக்க உதவும் ஒரு கேமரா அம்சமாகும்
  • ஸ்பாட்லைட்டில் நீங்கள் உங்களின் Snap-ஐ சமர்ப்பிக்கும்போது ஒரு #தலைப்பை (எ.கா., #LifeHacks) சேர்க்கவும்
ஸ்பாட்லைட் டேபில் உள்ளடக்கம் தோன்றுவதற்கு முன், நடுநிலையாளர்களால் அது மதிப்பாய்வு செய்யப்படும், அது எங்களின் ஸ்பாட்லைட் வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்ய அவர்கள் உதவுவார்கள். நீங்கள் ஸ்பாட்லைட்டில் Snap -ஐ சமர்ப்பித்ததும், உங்களின் தகவல் பக்கத்திலிருந்து உங்களின் சமர்ப்பிப்பின் நிலையைச் சரிபார்க்கவும்.