கதைகளுக்கு எவ்வாறு வெகுமதி பெறுவது

கதைகள் வருவாய் பகிர்வு நிகழ்ச்சிக்கு எவ்வாறு தகுதி பெறுவது என்பதை அறியவும்

Snapchat இல் தொடர்ந்து கதைகள் பகிர்ந்து கொள்ளும் படைப்பாளரா நீங்கள்?

அவ்வாறு இருந்தால், படைப்பாளர் தங்கள் கதையில் இடுகையிடும் உள்ளடக்கத்திற்கு எங்கள் திட்டம் வெகுமதிகளை வழங்குகிறது - இது Snapchat சமூகத்தில் முதலீடு செய்ததற்கு நாங்கள் நன்றி சொல்லும் வழி.

எப்படி தகுதி பெறுவது

படைப்பாளர்கள் தகுதியுடையவர்களா என்பதை முடிவு செய்ய 3 முக்கியப் பகுதிகளை நாங்கள் கருத்தில் கொள்கிறோம், மேலும் நீங்கள் தகுதி பெற்றால் மின்னஞ்சல் மூலம் உங்களைத் தொடர்புகொள்வோம், - ஆகையால் உங்கள் கணக்கு விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

1. பார்வையாளர்கள் மற்றும் ஈடுபாடு

  • தங்கள் பொதுத் தகவல் பக்கத்தில் குறைந்தது 50,000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும்; மற்றும்

  • கடந்த 28 நாட்களில் அவர்களின் பொதுச் சுயவிவரத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் அல்லது 12,000 மணிநேர பார்வை நேரம் இருக்க வேண்டும்

2. தொடர்ந்து பதிவிடும் திறன்

  • அவர்களின் பொதுக் கதையில் 10 நாட்களுக்கு, கடந்த 28 நாட்களில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 Snapகள் பதிவிட்டு இருக்க வேண்டும்

3. இணக்கம்

வருவாய் பகிர்வு எவ்வாறு செயல்படுகிறது

Snapchat பொதுக் கதையில் Snapகளுக்கு இடையில் விளம்பரங்களை இடுகையிடும், மேலும் படைப்பாளர்கள் அவர்கள் உருவாக்கிய வருவாய் அடிப்படையில் பணம் பெறுவார்கள்.

உங்கள் வெகுமதிகளைப் பணமாக்க விரும்புகிறீர்களா? கவலையில்லை. படைப்பாளர்கள் பயன்பாட்டில் தங்கள் வருமானத்தை நிர்வகிக்கலாம் மற்றும் அவர்கள் தேர்வு செய்யும் போதெல்லாம் தினமும் குறைந்தபட்சம் $100 ரொக்கம் பெறலாம்.

பணமாக்க, படைப்பாளர்கள் முழுமையான விவரங்களை கொண்டு சரியான முறையில் பணம் பெற வழி வகை செய்யப்பட வேண்டும் இங்கு உள்ள வழிமுறைகளை மட்டும் பின்பற்றுங்கள்.

கதைகளுக்கான சிறந்த நடைமுறைகள்

THE MORE THE MERRIER

அதிகம் இடுகையிடுவது, அதிக மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்

குறுகிய காலத்தில் அடிக்கடி இடுகையிடுங்கள். உங்கள் பொதுக் கதைகளில் தினசரி 20 இலிருந்து 40 Snapகள் என்ற பதிவேற்ற இலக்கு சிறப்பானது

TIME IS MONEY
பணம் நேரத்துடன் தொடர்புடையது

நீண்ட கதைகள் ஈடுபாட்டை அதிகரித்து அதிக வெகுமதிகளுக்கு வழிவகுக்கலாம்.

KEEP IT REAL
அது உண்மையாகவும் Snap-க்கு ஏற்றதாகவும் இருக்கட்டும்

Snapchat பயனர்கள் உண்மையான உங்களை அறிந்துகொள்ளவும் தொடர்புகொள்ளவும் விரும்புகிறார்கள். உங்கள் சமூகத்துடன் இணைய கதை பதில்கள் சிறந்த வழியாகும்.

மகிழ்விக்கும் Snapகள் மற்றும் கதைகளை உருவாக்க Snapchat கேமரா மற்றும் ஆக்கப்பூர்வக் கருவிகளைப் பயன்படுத்தவும். உங்கள் முதல் Snap-இல் டைனமிக் மோஷன் மற்றும் பிரகாசமான வண்ணங்கள் உங்கள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் மற்றும் குலோஸ்ட் கேப்ஷன் அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க உதவும் சூழலை வழங்குகின்றன.

KEEP IT CLEAN
அதை சுத்தமாக வைத்திருங்கள்

உங்கள் உள்ளடக்கம் உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும் மற்றும் எப்போதும் எங்கள் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.