ஸ்பாட்லைட்டில் எப்படி வெகுமதிகளைப் பெறுவது
புதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 2024
ஸ்பாட்லைட் உங்களை உலகம் முழுவதிலுமிருந்து பயனர்களுடன் குறுகிய வீடியோக்களை உருவாக்கவும் மில்லியன் கணக்கான Snapchat பயனர்களுடன் பகிரவும் உதவுகிறது. எங்கள் சமூகத்தின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை நாங்கள் மதிக்கிறோம், மேலும், ஸ்பாட்லைட் என்பது யார் வேண்டுமானாலும் அதிகக் கவனத்தைப் பெறும் இடமாகும்.

வளர்ந்து வரும் படைப்பாளர்களின் வெற்றிக்கு வழிவகுக்கிறது
Snapchat பயனர்களை அவர்களது படைப்பாற்றலுக்கு வெகுமதியளிப்பது எங்களுக்கு முக்கியமாகும். தகுதிவாய்ந்த ஸ்பாட்லைட் படைப்பாளிகளுக்குக் கிடைக்கும் மொத்த வெகுமதிகளை நாங்கள் அதிகரித்துள்ளோம் என்பதைப் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
ஸ்பாட்லைட்டில் உருவாக்குவதில் முதலீடு செய்யும் வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கு நாங்கள் வெகுமதியளிக்கிறோம். தகுதி வாய்ந்த Snapchat பயனர்கள் அந்த நாள்காட்டி மாதத்தில் சிறப்பாகச் செயலாற்றிய படைப்பாளர்களாக இருந்தால் அவர்கள் மாதாந்திர வெகுமதிகளைப் பெறலாம் - இந்த வெகுமதிகளைப் பணமாக்க முடியும். பார்வைகள் மற்றும் பிற ஈடுபாடு அளவீடுகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஒரு தனியுரிம ஃபார்முலா மூலம் செயல்திறன் தீர்மானிக்கப்படுகிறது.
தகுதிபெற:
  1. உங்கள் கணக்கை குறைந்தது 1 மாதம் முன்னர் தொடங்கியிருக்க வேண்டும்

  2. உங்கள் சுயவிவரம் பொதுவில் அமைக்கப்பட வேண்டும்
  3. உங்களைக் குறைந்தது 1,000 நபர்கள் பின்தொடரவேண்டும்
  4. நீங்கள் அந்த நாட்காட்டி மாதத்தில் குறைந்தபட்சம் 10,000 பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும்
  5. நீங்கள் அந்த நாட்காட்டி மாதத்தில் குறைந்தபட்சம் 10 முறைகள் 5 வெவ்வேறு நாட்களில் பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 பதிவுகள் Snapchat ஆக்கப்பூர்வக் கருவியைப் (கேமரா, திருத்துதல், அல்லது இசை இவற்றில் எதேனும் ஒன்று) பயன்படுத்தவேண்டும் 
  6. உங்கள் உள்ளடக்கம் அசலாக இருக்கவேண்டும் (நீங்கள் உருவாக்கியது)
  7. நீங்கள் தகுதிவாய்ந்த நாட்டில்வசித்து அங்கிருந்து Snapகளைப் பதிவிட வேண்டும்
  8. சமூக வழிகாட்டுதல்கள், உள்ளடக்க வழிகாட்டுதல்கள், ஸ்பாலைட் வழிகாட்டுதல்கள், சேவை நிபந்தனைகள், இசை வழிகாட்டுதல்கள்மற்றும் எங்களது ஸ்பாட்லைட் விதிமுறைகளுக்குஇணங்க வேண்டும். ஸ்பாட்லைட்டிலிருந்து நீங்கள் நீக்கும் எந்தவொரு Snapகளும் பணம் செலுத்துதலுக்குத் தகுதி பெறாது.

உங்கள் ஸ்பாட்லைட் சமர்ப்பிப்புகளில் இருந்து வெகுமதிகள் பெற நீங்கள் தகுதிபெற்றால், Snapchat செயலியில் ஒரு புஷ் அறிவிப்பைப் பெறுவீர்கள் மற்றும் எனது தகவல் குறிப்பு மூலமும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். நீங்கள் அங்கு கிரிஸ்டல் மையத்தைத் திறக்க 'எனது Snap கிரிஸ்டல்கள்' மீது தட்டலாம்.
ஸ்பாட்லைட் சவால்கள்
சவாலின் தூண்டுதல்களுக்குப் பதிலளிக்கக்கூடிய சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்பாட்லைட் சமர்ப்பிப்புகளைச் சமர்ப்பிப்பதற்காக பரிசுகளை வெல்லுங்கள் மற்றும் குறிப்பிட்ட மதிப்பீடும் அகவுகோள்களில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுங்கள்.
Snap கேமரா மற்றும் தொகுப்பாக்கம் செய்யும் கருவிகளைப் பயன்படுத்திப் படைப்பாளர்கள் அவர்களின் தனித்துவமான குரல் மற்றும் படைப்பாற்றலை முன்னிலைப்படுத்துவதற்கான வாய்ப்பு இது. சவால்களுக்கு Snapகளைச் சமர்ப்பிக்கும் படைப்பாளிகள் வெகுமதிகளுக்கும் தகுதி பெறலாம்.
உங்களின் ஸ்பாட்லைட்களை யார் பார்க்கிறார்கள்?
ஸ்பாட்லைட்டிற்குள் ஒவ்வொரு நபரின் அனுபவத்தையும் அவர்களுக்குத் தனிப்பட்டதாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு Snapchat பயனர்களும் ஆர்வம் கொண்டிருக்கக்கூடிய மிகவும் சுவாரஸ்யமான Snapகளைக் காட்சிப்படுத்துவதற்காக எங்கள் உள்ளடக்கத்தின் படிமுறைகள் வேலை செய்கின்றன.
நாங்கள் உருவாக்கும் அனைத்தும் Snapchat பயனர்கள் அவர்களை வெளிப்படுத்தவும், அந்தத் தருணத்தை அனுபவித்து வாழவும், உலகத்தைக் குறித்துக் கற்றுக்கொள்ளவும், ஒன்றாகச் சேர்ந்து மகிழ்வுறவும் உருவாக்கப்பட்டுள்ளன.