படைப்பாளர்களுக்கான மார்கெட்பிளேஸ்
Snapchat-இன் படைப்பாளர் சமூகத்தைப் பயன்படுத்தி கண்டறிந்து கூட்டுசேர தொழில்நிறுவனங்களுக்கு படைப்பாளர்களுக்கான மார்கெட்பிளேஸ் உதவுகிறது.
அது எப்படி வேலை செய்கிறது
அனைத்து வடிவங்கள் மற்றும் அளவுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், பிராண்டட் உள்ளடக்க முயற்சிகள், AR கூட்டணிகள், மற்றும் பலவற்றுக்காகப் படைப்பாளர்களுடன் பணியாற்ற அதிகளவில் முயற்சிக்கின்றன. 
படைப்பாளர்களுக்கான மார்கெட்பிளேஸ் என்பது, பிராண்ட்கள் மற்றும் படைப்பாளர்கள் இணைந்து பணியாற்றுவதற்காக உதவும் அம்சங்களின் தொகுப்பாகும். படைப்பாளர்கள் அவர்களின் திறமையைப் பயன்படுத்தி, கதைகளைக் கூறவும் இலக்குகளை அடையவும் தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காகத் தொடர்புகொள்ளலாம். 
பட்ஜெட், மொழி, மற்றும் நிபுணத்துவம் போன்ற வடிகட்டிகளைப் பயன்படுத்தித் தொழில் நிறுவனங்கள் கூட்டாண்மையாளர்களைத் தேடுகிறார்கள். படைப்பாளர்கள் அவர்களின் சொந்த விகிதங்களை நிர்ணயித்து, எந்தத் திட்டங்களை எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள். 
CH_70_Reap_Rewards_Creator_Marketplace.jpg
எப்படி சேர்வது
சிறந்த லென்ஸ் படைப்பாளர்களுடன் இணையத் தொழில்நிறுவனங்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்டது, காலப்போக்கில் பல வகை படைப்பாளர்களைச் சேர்த்து விரிவடையும். நீங்கள் மார்கெட்பிளேஸில் சேரத் தேர்வு செய்யப்பட்டிருந்தால், Snap -இல் இருந்து யாராவது உங்களைத் தொடர்புகொள்வார். 
இது சமநிலையைப் பற்றியதாகும். அதிகமான படைப்பாளர்கள் சரிபார்க்கப்பட்டும், உயர் தரமான பிராண்ட்கள் தொடர்ந்து மார்கெட்பிளேஸில் இணையவுதாலும், Snap அதிகமான படைப்பாளர்களை தொடர்புகொள்ளும்
அழைக்கப்படுவதற்கான சிறந்த வழி எது? பொதுத் தகவல் பக்கம் ஒன்றை அமைத்து, சுவாரஸ்யமான உள்ளடக்கத்தைத் தவறாமல் உருவாக்கி, உங்களின் பார்வையாளர்களைக் கட்டமைத்து, Snap நட்சத்திரம் ஆகிடுங்கள்! 
மார்கெட்பிளேஸில் அழைக்கப்பட்டவுடன், நீங்கள் ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவீர்கள். உங்களின் படைப்பாற்றலைச் சிறப்பாகக் காட்டும் என்று நீங்கள் கருதும் லென்ஸஸ் அல்லது வீடியோக்களை முதன்மையாக்குவதற்கான வாய்ப்பை இங்கு நீங்கள் பெறுவீர்கள். 
உதவிக்குறிப்புகள்
  • பார்வையாளர்களின் உட்பார்வைகளைப் பகிர்வதைத் தேர்வு செய்யவும் (மக்கள்தொகை சார்ந்த தகவல்கள், சென்றடைபவர்களின் எண்ணிக்கை, முதலியன). நீங்கள் பார்வையாளர்கள் உட்பார்வைகளை இயக்கியிருந்தால் பிராண்ட்கள் உங்களுடன் சேர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது, எதைப் பகிர வேண்டும் என்பதை நீங்கள் தான் தேர்வு செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.  
  • படைப்பாளர்களுக்கான மார்கெட்பிளேஸில் பங்கேற்பதன் மூலம், தொழில் நிறுவனங்களால் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும், எனவே அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைக் கிடைக்கச் செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
  • உங்களின் மின்னஞ்சலைத் அடிக்கடி பார்க்கவும். சிந்தனையுடன், வரவேற்புடன், மற்றும் விரைவாகப் பதிலளிப்பவராக இருங்கள்! 
  • ஒரு லென்ஸ் அல்லது வீடியோவை முதன்மையாக்கும்போது முந்தைய பிராண்ட் ஒப்பந்தங்களைக் காட்சிப்படுத்தவும்.