பகுப்பாய்வுகளைத் திறந்து உங்களின் பார்வையாளர்களை ஈடுபடுத்தவும்
உங்களின் ரசிகர்களிடையில் எந்த உள்ளடக்கம் எதிரொலிக்கிறது என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள ஆக்கப்பூர்வமான தேர்வுகளை அறிவிக்கப் பகுப்பாய்வுகள் உதவுகிறது.
குறிப்பு: இந்த அம்சங்கள் தொடர்ந்து நடைபெறுதல் மற்றும் தானியக்க முறை அடிப்படையில் காலப்போக்கில் பயன்பாட்டிற்கு வருகின்றன, எனவே இவை அனைத்து Snapchat பயனர்களுக்கும் கிடைக்காது.
உட்பார்வைகள் மற்றும் நடவடிக்கைகள்
உங்களின் பார்வையாளர்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ள 'உட்பார்வைகள்' டேபுக்குச் செல்லவும்.
சமீபத்திய கதைகள் மற்றும் 28-நாள் சுருக்கம்
'சமீபம்" என்பதில், ஒவ்வொரு கதை டைலும் கதை சென்றடைந்த பார்வையாளர்கள் (தனித்துவமான பார்வையாளர்கள்) மற்றும் கதையில் உள்ள Snapகளின் எண்ணிக்கையைக் காட்டும். பார்வைகள், சென்றடைந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை, திரைப்பிடிப்புகள், ஸ்வைப்-அப்கள் மற்றும் ஒவ்வொரு Snapகளுக்குமான இடைவினைகளைப் பார்க்கக் கதை டைலைத் தட்டவும். உங்களின் சமீபத்தில் பிரபலமாகி கொண்டிருப்பதை பார்க்க '28-நாள் சுருக்கத்தைப் பார்க்கவும்'.
கதை உட்பார்வைகள்
மேலும் அறிந்துகொள்ள 'மேலும் காண்க' என்பதைத் தட்டவும். உட்பார்வைகளில், 7 அல்லது 28 நாட்களாக உங்களின் ஈடுபாட்டுடன் ஒரு விளக்க வரைபடத்தைப் பார்க்க ஏதாவது புள்ளிவிவரத்தில் நீங்கள் தட்டலாம்.
24-மணிநேர சாளரத்தின் அடிப்படையில் உங்களின் பழைய Snapகள் அனைத்தும் தொகுப்பாக்கப்படும். அளவை முறை அடிப்படையிலும் நீங்கள் வடிகட்டலாம் (சென்றடைந்த பார்வையாளர்கள், கதையின் பார்வைகள், கதையின் பார்வை விகிதம், மற்றும் சராசரி பார்வை நேரம்).
பார்வையாளர்கள்
உங்களிடம் எத்தனை சந்தாதாரர்கள் உள்ளனர்? கடந்த 28 நாட்களில் உங்கள் கதை பார்வையாளர்களின் பாலினப் பகுப்பாய்வு தகவல்கள், முதலிடத்தில் இருக்கும் இடம், மற்றும் முதலிடத்தில் இருக்கும் விருப்பம்.
Snapchat வாழ்க்கைமுறை வகைகளுடன் உங்களின் ஈடுபட்டுள்ள பார்வையாளர்களின் விருப்பங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள 'மேலும் காண்க' என்பதைத் தட்டவும். வயது, பாலினம், வகை, மற்றும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் தகவல்களை ஒப்பிடவும்
செயல்பாடு
உங்களின் பொதுத் தகவல் குறிப்புக்கு நீங்கள் ஒதுக்கீடு செய்துள்ள ஏதாவது பாத்திரத்தின் பதிவிடுதல் செயல்பாட்டைக் கண்காணிக்கச் செயல்பாடு டேப் உங்களுக்கு உதவுகிறது.
உங்களின் பார்வையாளர்களை ஈடுபடுத்தவும்
கதை மறுமொழிகள் மற்றும் மேற்கோள் காட்டுதலைப் பயன்படுத்திப் பெரிய, ஈடுபாட்டுடன் உள்ள பார்வையாளர்களை நீங்கள் சென்றடைவதை Snapchat சாத்தியமாக்குகிறது.
கதை மறுமொழிகள்
தனிப்பயனாக்கப்பட்ட வடிகட்டுதல்கள் மூலம் அவர்களுக்கு வரும் செய்தி வகைகளின் மீதான கட்டுப்பாட்டைப் படைப்பாளர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம், இதனால் உரையாடல்கள் மரியாதைக்குரியவையாகவும் மகிழ்ச்சி மிகுந்ததாகவும் இருக்கும்.
கதை மறுமொழிகளைப் பார்க்க…
  1. உங்களின் பொதுக் கதையைத் தட்டவும்
  2. உட்பார்வைகள் மற்றும் மறுமொழிகளைப் பார்க்க மேல் நோக்கி ஸ்வைப் செய்யவும்
  3. முழுச் செய்தியையும் பார்த்து மறுமொழி அளிப்பதற்கு, ஒரு மறுமொழியைத் தட்டவும்
  4. மற்ற Snapகளைப் பார்க்க ஸ்வைப் செய்யவும் அல்லது தம்ப்நெயில்களைத் தட்டவும். Snap -ஐ முழு திரையில் காண கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும் 👇
மேற்கோள் காட்டுதல்
மேற்கோள் காட்டுதல், ஒரு சந்தாதாரரின் பதிலை உங்களின் பொதுக் கதையில் பகிர்வதை எளிதாக்குகிறது, மேலும், ரசிகர்களை நீங்கள் மேற்கோள் காட்டியதாக அறிவிக்கப்படுவதற்கு அவர்கள் உற்சாகமடைவார்கள். உங்களுக்குக் கேள்விகளை அனுப்பும்படி உங்களின் பார்வையாளர்களிடம் கேட்டு அதற்குப் பதில் அளிக்கவும்! அல்லது, "எந்த வகை உள்ளடக்கத்தை நீங்கள் அதிகம் பார்க்க விரும்புகிறீர்கள்?" என்பது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்கலாம்
 
ஒரு பதிலை மேற்கோள் காட்டுவதற்கு…
  1. உங்களின் பொதுக் கதையில் நீங்கள் பகிர விரும்பும் ஒரு பதிலின் வலது பக்கத்தில் உள்ள மேற்கோள் பொத்தானைத் தட்டவும்
  2. அந்தப் பதில், கேமரா திரையின் மீது ஒரு ஸ்டிக்கராக வைக்கப்படும். உங்களின் எதிர்வினை அல்லது பதில்வினையைப் பகிர ஒரு Snap எடுக்கவும். 
  3. உங்களின் பொதுக் கதையில் சேர்க்க 'அனுப்புக' என்பதைத் தட்டவும்.
 
தளத்திற்கு வெளியே உள்ளடக்கத்தைப் பகிரவும்
எளிதாகப் பகிரக்கூடிய இணைப்புகளை பயன்படுத்தித் தளத்திற்கு வெளியே உள்ள மற்றவர்களுடன் - ஸ்பாட்லைட் Snapகள், Snap சொந்த தயாரிப்புகள், அல்லது நிகழ்ச்சிகளை - Snapchat பயனர்களால் பகிர முடியும்.