உங்களின் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கான வழிகள்
உங்கள் உள்ளடக்கத்தை Snapchat-இல் பகிர்ந்து கொள்ள பல வழிகள் உள்ளன, அது ஒரு நண்பரிடமோ, தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிடமோ, உங்களைப் பின்தொடர்பவர்களிடமோ அல்லது பரந்த Snapchat சமூகத்துடனோ, யாரிடம் இருந்தாலும் சரி. Snapchat இல் பகிரப்பட்ட அனைத்து உள்ளடக்கமும் Snapchat சமூக வழிகாட்டுதல்கள்மற்றும் உள்ளடக்க வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்.
நண்பர்களுக்கான என் கதை
2013 -ஆம் ஆண்டு கதைகளை Snapchat தொடங்கியது, எனவே நீங்கள் உங்களின் கடந்த காலங்களில் இருந்து தருணங்களை உங்களின் நண்பர்களுடன் பகிர முடியும். என் கதை உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கானது (உங்களைத் திருப்பி தங்கள் நண்பர்களாகச் சேர்த்தவர்கள்). அமைப்புகளுக்குச் சென்று "தனியுரிமைக் கட்டுப்பாடுகள்"-க்கு ஸ்குரோல் டவுன் செய்து, "என் கதையைப் பார்க்கவும்" என்பதை "என் நண்பர்கள்" அல்லது "தனிப்பயன்" என்பதற்கு அமைக்கவும். "தனிப்பயன்" என்பது என் கதையை குறிப்பிட்ட நண்பர்கள் பார்ப்பதிலிருந்து விலக்க உங்களை அனுமதிக்கிறது.
பொது கதை
உங்கள் பொது என் கதை என்பது உங்கள் உள்ளடக்கத்தை நீங்கள் எவ்வாறு உங்களைப் பின்தொடர்பவர்கள் மற்றும் பரந்த Snapchat சமூகத்துடன் பகிரலாம் என்பதாகும். பொது கதைகள் நேரடியாக உங்கள் உண்மையான நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்குச் செல்லும். உங்கள் நண்பர்கள் (நீங்கள் திருப்பிச் சேர்த்தவர்கள்) உங்கள் பொதுக் கதைகளை கதைகள் பக்கத்தின் நண்பர்கள் பிரிவில் பார்ப்பார்கள் மற்றும் உங்களைப் பின்தொடர்பவர்கள் (உங்களைச் சேர்த்தவர்கள் ஆனால் நீங்கள் திருப்பிச் சேர்க்காதவர்கள்) உங்கள் பொதுக் கதைகளை கதைகள் பக்கத்தின் பின்தொடரூபவர்கள் பிரிவில் பார்ப்பார்கள். நீங்கள் அதிகளவிலான பார்வையாளர்களைக் கட்டமைத்தல், உங்கள் பொதுக் கதைகள் பக்கத்தில் விநியோகம் செய்யப்பட தகுதிபெறலாம். பொதுக் கதைகளை உங்கள் பொதுத் தகவல் பக்கத்திற்கு வருகைதரும் எந்த Snapchat பயனராலும் பார்க்கமுடியும்.
ஸ்பாட்லைட்
உங்கள் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு அப்பாற்பட்ட பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் Snapகளை ஸ்பாட்லைட்டில் சமர்ப்பிக்கவும். ஸ்பாட்லைட்டில் உங்கள் உள்ளடக்கத்தைப் பகிர்வது, புதிய ரசிகர்களால் கண்டறியப்படுவதற்கும் உங்கள் பார்வையாளர்களை அதிகரிப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும்! ஸ்பாட்லைட்டில் உங்கள் Snapகளைச் சமர்ப்பிக்கும் போது, "பொதுத் தகவல் பக்கத்தில்" Snap-ஐக் காட்டு" என்பதை மாற்றுவதன் மூலம், உங்களுக்குப் பிடித்த ஸ்பாட்லைட்களை நேரடியாக உங்கள் பொதுத் தகவல் பக்கத்தில் சேமிக்கலாம்.
Snap வரைபடம்
Snap வரைபடம் என்பது உங்களது தனிப்பட்ட வரைபடமாகும், அதில் நீங்கள் உங்கள் இடத்திலிருந்து Snapகளைப் பொதுவாகப் பகிரலாம் மற்றும் உலகம் முழுவதும் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தைப் பார்க்கலாம்.
உங்களிடம் பொதுத் தகவல் பக்கம் இருந்தால், நீங்கள் Snapகளை பெயரின்றியோ அல்லது உங்கள் பெயரைச் சேர்த்தோ Snap வரைபடத்திற்குச் சமர்ப்பிக்கலாம். Snap வரைபடத்திற்கு உங்கள் பெயரைச் சேர்த்து ஒரு Snap-ஐ நீங்கள் பகிர்ந்தால், உங்கள் Snap-ஐப் பார்ப்பவர்கள் உங்களைப் பின்தொடர்ந்து உங்கள் Snap-இலிருந்து நேரடியாக உங்கள் பொதுத் தகவல் பக்கத்திற்குச் சென்று உங்கள் உள்ளடக்கத்தைப் பற்றி மேலும் கண்டறியமுடியும்.
ஸபாட்லைட் அல்லது உங்கள் பொதுக் கதையில் பகிரப்படும் இடக் குறிச்சொற்கள் கொண்ட Snapகள் Snap வரைபடத்தில் உள்ள இட தகவல் குறிப்புகளில் தோன்றும்.
உங்கள் பொதுத் தகவல் பக்கத்தில் கதைகளைச் சேமிக்கவும்
என் பொதுத் தகவல் பக்கம் → ‘கதைகள்’-க்குச் செல்க.
தகவல் குறிப்பு மேலாண்மைப் பிரிவிலிருந்து உங்கள் தகவல் குறிப்பைத் தட்டி, 'கதைகள்' தாவளுக்குச் சென்று 'உங்கள் தகவல் குறிப்பில் ஒரு கதையைச் சேர்க்கவும்' என்பதைத் தட்டவும்.
உங்கள் கதையை உருவாக்கவும்
உங்கள் கதையை உருவாக்க ஒன்று அல்லது அதிக Snapகளைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஏற்கனவே பகிர்ந்த பொது புகைப்படங்கள், உங்கள் நினைவுகளிலிருந்து Snapகள் அல்லது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக உங்கள் கேமரா சுருளிலிருந்து தேர்வு செய்யலாம். நீங்கள் முடித்தவுடன், 'சேர்க்கவும்' என்பதைத் தட்டவும். ஒரு கதையில் 100 Snapகள் அல்லது 5 நிமிடங்கள் வரையிலான மொத்த உள்ளடக்கத்தைச் சேர்க்கலாம்—எதை நீங்கள் முதலில் எட்டுகிறீர்களோ அது வரை.
உங்களின் கதையை மதிப்பாய்வு செய்து திருத்தவும்.
உங்களின் மொத்தக் கதையையும் முன்னோட்டமிடவும், உங்களின் பார்வையாளர்களுக்கு அது எப்படித் தோன்றும் என்பதைப் பார்க்கவும் ஒரு Snap, புகைப்படம், அல்லது வீடியோவைத் தட்டவும். மேலே வலது மூலையில் உள்ள 'திருத்து' என்பதைத் தட்டுவதன் மூலம் உள்ளடக்கத்தை மறுசீரமைக்கவும் அல்லது அகற்றவும்.
உங்களின் தலைப்பு மற்றும் அட்டைப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்களின் கதைக்கு ஒரு தலைப்பை உள்ளிடவும். அட்டைப்படத்தைத் தேர்ந்தெடுக்க, புகைப்படத் தேர்ந்தெடுப்பானில் ஸ்க்ரால் செய்து, உங்களின் சேமிக்கப்பட்ட கதையில் உள்ள உள்ளடக்கத்திலிருந்து ஒரு படத்தைத் தேர்வு செய்யவும். ஒரு நல்ல தலைப்பு மற்றும் அட்டைப்படம், உங்களின் உள்ளடக்கத்தில் என்ன இருக்கிறது என்பது குறித்த ஒரு குறிப்பை உங்களின் ரசிகர்களுக்கு வழங்கும். நீங்கள் முடித்ததும், உங்களின் பொதுத் தகவல் பக்கத்தில் உங்களின் கதையைச் சேமிக்க 'நிறைவு செய்க' என்பதைத் தட்டவும்.