Snapchat அடிப்படைகள்
Snapchat என்றால் என்ன?
Snapchat என்பது உண்மையான நண்பர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கேமரா செயலியாகும். இது, மிகை மெய்மை மூலம் உங்களை வெளிப்படுத்தி, உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கேளிக்கையாக இருக்கவும், உங்களின் படைப்பாற்றலை உலகத்துடன் பகிர்வதற்குமான ஒரு தளம் ஆகும். 
  • Snapchat -இல் 293 மில்லியனுக்கும் மேல் உலகளாவிய தினசரிப் பயனர்கள் இருக்கிறார்கள்—அமெரிக்கா, U.K., பிரான்ஸ், ஆஸ்திரேலியா, மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 13–24 வயதுடையவர்களில் 90% பேரை மற்றும் 13–34 வயதுடையவர்களில் 75% பேரை Snapchat சென்றடைகிறது.
  • சராசரியாக ஒவ்வொரு நாளும் 200 மில்லியனுக்கும் அதிகமான Snapchat பயனர்கள் மிகை மெய்மையில் ஈடுபடுகின்றனர்.
  • உங்களின் வீடியோக்கள் மற்றும் படங்களில் AR லென்ஸஸ், வடிகட்டிகள், மற்றும் பிற ஆக்கப்பூர்வக் கருவிகளைச் சேர்ப்பதன் மூலம் உங்களின் உள்ளடக்கத்தைப் பிரபலம் ஆகச் செய்யுங்கள்
  • Snapchat படைப்பாளராக உங்களின் தொழில் வாழ்க்கையைக் கட்டமைக்க எங்களின் வலைதளமானது, உத்வேகம், உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள், மற்றும் எப்படி-செய்வது உள்ளிட்டவற்றை வழங்குகிறது
Body Image
ஒரு கணக்கை உருவாக்குதல்
Snapchat செயலியைப் பதிவிறக்கம் செய்து திறந்து, ஒரு தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி பயன்படுத்திப் பதிவு செய்யவும். சில விரைவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், உங்களுக்கு அனைத்தும் அமைக்கப்பட்டுவிட்டது.
நிபுணர் குறிப்பு: Snapchat பயனர்கள் உங்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலான ஒரு பயனர் பெயரைத் தேர்வு செய்யவும். உங்களின் பெயரை உள்ளிடும் போது, அடையாளம் காணக்கூடிய வகையிலான ஒரு காட்சிப் பெயரைத் தேர்வு செய்வதை உறுதி செய்யவும்.
கணக்கு பாதுகாப்பு
எங்கள் Snapchat சமூகத்தின் பாதுகாப்பை விட மிகவும் முக்கியமானது எதுவும் இல்லை. இயல்பாகவே எங்களின் அம்சங்கள் தனிப்பட்ட முறையில் இருக்கும். Snapchat பயனர்கள் எந்த தகவலைப் பகிர வேண்டும், அதை யாரிடம் பகிர வேண்டும் என்பதை அவர்களே தேர்வு செய்வார்கள். 
இரு காரணி அங்கீகாரம் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அமைப்பதன் மூலம் அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்கவும். உங்களின் தகவல் பக்கத்தில் 'அமைப்புகள்' என்பதின் கீழ் இரு காரணி அங்கீகாரத்தைச் செயல்படுத்தவும்.