ஆர்வம் மிக்க மற்றும் நிபுணத்துவம் மிக்க படைப்பாளர்களுக்காக
CH_016
Snap நட்சத்திரங்கள்
Snap நட்சத்திரங்கள் Snapchat-ஆல் சரிபார்க்கப்பட்ட சிறந்த படைப்பாளிகள் மற்றும் பிரபலங்கள் ஆவார்கள். அவர்கள் செயலியில் கோல்டு வெரிஃபிகேஷன் நச்சத்திரத்தைப் பெறுவார்கள். அவர்கள் கலாச்சார ரீதியாகப் பொருத்தமானவர்கள் மற்றும் Snapchat-இல் அதிகம் ஈடுபடுவார்கள். மேலும் அவர்கள் அதிகப் பார்வையாளர்களைப் பெற்று உயர் தர உள்ளடக்கத்தை உருவாக்குவார்கள். Snap நட்சத்திரங்கள் பிரத்தியேக அம்சங்கள் மற்றும் பணம் ஈட்டும் வாய்ப்புகளுக்கான அணுகல்களைப் பெற்றுள்ளார்கள், மேலும் அவர்கள் Snapchat-ஆல் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் உள்ளடக்கத்தை மேம்படுத்தி உங்கள் பார்வையாளர்களை அதிகரிக்கும்போது Snap நட்சத்திரமாக நீங்கள் அழைக்கப்படலாம்.  நீங்கள் Snap நட்சத்திர நிலைக்குத் தகுதியுடைவர் என நீங்கள் நம்பினால், இந்தப் படிவத்தை நிரப்புங்கள், மேலும் நீங்கள் அங்கீகரிக்கப்பட்டால், திட்டத்திற்கு அழைக்கப்படலாம்.
மேலும் தகவலுக்கு, இங்கே மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
பொறுப்புகளை நிர்வகிக்கவும்
நம்பிக்கைக்குரிய Snapchat பயனர்கள் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உங்களின் பொதுத் தகவல் பக்கத்தை நிர்வகிக்க உங்களுக்கு உதவும் வகையில் பொறுப்புகளை நீங்கள் ஒதுக்கீடு செய்யலாம். நீங்கள் யாரையாவது ஒரு பொறுப்பில் நியமிக்கும்போது, அவர்கள் ஒரு அறிவிப்பைப் பெறுவார்கள். சரியான பயனர் பெயரைச் சேர்ப்பதை உறுதி செய்யவும்!
ஒரு பொறுப்பை ஒதுக்கீடு செய்வதற்கு, உங்களின் தகவல்பக்க திரையின் மேல் வலது மூலையில் உள்ள அமைப்புகள் கியர் படவுருவைத் தட்டவும். பின்னர் 'பொறுப்புகளை நிர்வகிக்கவும்'>'புது பொறுப்பை ஒதுக்கீடு செய்க'>'பயனர் பெயரை உள்ளிடவும்'>'தொடர்புடைய பொறுப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்' என்பதற்குச் செல்லவும்.
தகவல் பக்க நிர்வாகிகள் உங்களின் பொதுத் தகவல் பக்கத்தை நிர்வகிக்கலாம், உங்களின் பொதுக் கதையிலிருந்து எந்தவொரு Snapகளையும் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம், முதன்மையாக்கங்களை நிர்வகிக்கலாம், பொறுப்புகளை ஒதுக்கலாம், மற்றும் உட்பார்வைகளைப் பார்க்கலாம்.
தகவல்பக்க கூட்டுப்பணியாளர்கள் உங்களின் உட்பார்வைகளைப் பார்க்கலாம் மற்றும் உங்களின் பொதுக் கதையிலிருந்து எந்தவொரு Snapகளையும் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.
கதை பங்களிப்பாளர்கள் உங்களின் பொதுக் கதையில் Snapகளைச் சேர்க்கலாம் மற்றும் இந்த Snapகளில் உட்பார்வைகளை அகற்றலாம் அல்லது பார்க்கலாம், அத்துடன் உங்களின் முந்தைய Snapகள் அனைத்தையும் பார்க்கலாம்.
உட்பார்வைகள் பார்வையாளர்கள் - நீங்கள் ஊகித்திருப்பீர்கள் - உங்களின் உட்பார்வைகளைப் பார்க்கலாம்.
உங்களின் பார்வையாளர்களை அதிகரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்
உங்கள் பார்வையாளர்களை அதிகாரிக்கும் அவர்களுடன் தொடர்புகொள்ளவும் பொதுக் கதை மற்றும் Snap வரைபடத்தை உங்கள் ஸ்பாட்லைட்டில் பொதுவெளியில் இடுகையிடுங்கள்.
  • உங்கள் Snapகளை ஸ்பாட்லைட், Snap வரைபடம் மற்றும் உங்கள் பொதுக் கதையில் பகிருங்கள் 
  • பின் தொடராதவர்களை ஒரு வாரத்தில் சில முறை உங்களைச் சேர்க்க ஊக்குவியுங்கள் 
  • பின்தொடர்பவர்களை உங்கள் பொதுக் கதை இடுகைகளுக்கான அறிவிப்புகளைப் பெற கதை அறிவிப்புகளை இயக்க ஊக்குவியுங்கள்
  • கதை பதில்கள் மற்றும் மேற்கோள் காட்டுதல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்களைப் பின்தொடர்பவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள்