எக்ஸ்ப்ளோர் Snapchat
உங்களுக்கு மிகவும் விருப்பமானவர்களுடன் உங்களின் தினசரி வாழ்வின் தருணங்களைப் பகிர்வதற்காக Snapchat வடிவமைக்கப்பட்டுள்ளது.
CH_010
5 டேப்களில் செல்லவும்
கேமரா. Snapchat எப்போதும் நேரடியாகக் கேமராவைத் திறக்கிறது, ஃபீடை அல்ல, எனவே நீங்கள் அந்தத் தருணத்தில் உங்களின் கண்ணோட்டத்தைப் பதிவு செய்யலாம். புகைப்படம் மற்றும் வீடியோ Snapகளை எடுக்கக் கேமராவைப் பயன்படுத்தவும், லென்ஸஸ் மற்றும் ஆக்கப்பூர்வக் கருவிகளைப் பயன்படுத்தவும், மேலும், உங்களின் நெருங்கிய நண்பர்கள் அல்லது Snapchat சமூகத்துடன் பகிரவும். 
அரட்டை. நண்பர்கள் மற்றும் குழுக்களுக்கு Snapகளை அனுப்பவும், உங்களின் Bitmoji மற்றும் கேமியோ பயன்படுத்திச் செய்தி அனுப்புவதை வேடிக்கையாக மாற்றவும். தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த சரிபார்க்கப்பட்ட படைப்பாளர்களால் கதை மறுமொழிகள் என்று அழைக்கப்படும் அம்சத்தை அணுகி நேரடியாக ரசிகர்களுக்கு மறுமொழி வழங்க முடியும்.
வரைபடம். உள்ளூர் சமூகத்திடமிருந்து Snap-களைப் பார்க்க, அல்லது உங்களின் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க ஒரு ஹாட்ஸ்பாட்டின் மீது தட்டுவதன் மூலம் உலகைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்—அவர்களின் இடத்தைப் பகிர அவர்கள் தேர்வு செய்தால் அவர்களின் Bitmojis -ஐ நீங்கள் பார்ப்பீர்கள்.
கதைகள். நிகழ்ச்சிகள் மற்றும் Snap அசல் உள்ளடக்கம் உட்பட Snap நட்சத்திரங்கள் மற்றும் Discover வெளியீட்டாளர்களின் உள்ளடக்கத்துடன் உங்களின் நண்பர்களிடமிருந்து கதைகளை அனுபவித்திடுங்கள். உங்களுக்கு விருப்பமானவற்றைத் தொடரவும் அல்லது ஏதாவது புதியதைக் கண்டுபிடிக்கவும்.
ஸ்பாட்லைட். செயலியின் இடது மூலையில் உள்ள ஸ்பாட்லைட் படவுருவைத் தட்டவும். இங்குத் தான் சமூகத்திலிருந்து மிகவும் பொழுதுபோக்கான Snapகளை நாங்கள் முதன்மையாக்குகிறோம், இங்கு உங்களால் அதிகமான புதுப் பார்வையாளர்களை அடைய முடியும். எது பிரபலமாக உள்ளது என்று பார்த்து, உங்களின் சிறந்த அசல் உள்ளடக்கத்தைப் பகிரவும்.
உங்களின் நண்பர்களைச் சேர்க்கவும் மற்றும் உங்களின் பார்வையாளர்களை அதிகரிக்கவும்
உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த நபர்களுடன் (நண்பர்கள், குடும்பம், அல்லது ரசிகர்கள்) இணைந்து உங்கள் பார்வையாளர்களை அதிகரிக்க உங்கள் தகவல் பக்கத்தைப் பகிரவும் பல வழிகள் உள்ளன.
Snapcode. உங்களின் தனித்துவமான Snapcode-ஐ பார்க்க, மேலே இடது மூலையில் உள்ள உங்களின் தகவல்பக்க படவுரு - ஐ தட்டவும். Snapchat -இல் நண்பர்களை எளிதாகச் சேர்ப்பதற்கு, Snapcode அல்லது திரையின் மேலே வலது மூலையில் உள்ள பகிர்தல் படவுருவைத் தட்டுவதன் மூலம் இந்தக் குறியீட்டை அனைத்துச் சமூகத் தளங்களிலும் நீங்கள் பகிரலாம். 
பயனர்பெயர். உங்களின் அனைத்துச் சமூகச் சேனல்களின் அடிப்படைக் குறிப்பில் உங்களின் பயனர்பெயரைச் சேர்ப்பதை உறுதி செய்யவும்.
தொடர்புகள். உங்களின் தகவல் பக்கத்திற்குச் சென்று 'நண்பர்களைச் சேர்' என்பதைத் தட்டுவதன் மூலம் உங்களின் மொபைல் தொடர்புகளிலிருந்து நண்பர்களை நீங்கள் சேர்க்கலாம், ஆனால் முதலில் உங்களின் தொடர்புகளை அணுகுவதற்கான அனுமதியை நீங்கள் Snapchat -க்கு வழங்க வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட நண்பர்கள். உங்களின் பரிந்துரைக்கப்பட்ட நண்பர்கள் 'நண்பர்களைச் சேர்' திரையில் 'விரைவு சேர்ப்பு'-இன் கீழ் தோன்றுவார்கள்.