Snap ஒலிகள் மற்றும் இசை
உங்களின் Snapகளை மிகவும் மறக்கமுடியாததாக்குவதற்காக ஒலிகளைச் சேர்க்கவும்.
ஒலிகள் கருவி
உரிமம் பெற்ற பாடல் க்ளிப்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களிலிருந்து குறிப்பிட்ட பகுதிகள், மற்றும் அவற்றின் சொந்த ஆடியோவை Snapchat பயனர்களின் Snapகள் மற்றும் கதைகளில் சேர்க்க ஒலிகள் (கேமரா திரையில் 🎵 படவுரு) உதவுகிறது. 
உங்களை வெளிப்படுத்த ஒலிகளைப் பயன்படுத்தவும், உத்வேகத்தைக் கண்டுபிடிக்கவும், அல்லது முன்னர் நீங்கள் அறிந்திராத புதிய கலைஞர்களைக் கண்டறியவும். 
Snap-இன் இசை கூட்டாளிகளிடமிருந்து இசை பட்டியல் மற்றும் Snap-இன் உள்ளடக்கக் கூட்டாளிகளிடமிருந்து தொலைக்காட்சி மற்றும் திரைப்பட ஆடியோக்களை இந்தக் கருவி கொண்டுள்ளது. இசை பட்டியல்கள், எங்களின் சமூகத்திற்குப் பொருத்தமான வகைகள், மனநிலைகள், மற்றும் தருணங்களிலும், அத்துடன் Snapchat-இல் பிரபலமாக உள்ள பாடல்களிலும் கவனம் செலுத்துகிறது. உங்களின் Snapகளில் உரிமம் பெற்ற இசை மற்றும் திரைப்பட உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும்போது எங்களின் Snapchat -இல் ஒலிகள் வழிகாட்டுதல்களைப் பார்த்துப் பின்பற்றவும்.
யாராவது ஒலிகளுடன் உங்களின் Snap -ஐ பார்க்கும்போது, பாடலின் தலைப்பு, கலைஞரின் பெயர், மற்றும் ஆல்பம் ஆர்ட் உள்ளிட்டவற்றைப் பார்ப்பதற்காக அவர்கள் மேலே ஸ்வைப் செய்யலாம், மேலும், அந்தப் பாடலை அவர்களின் சொந்த Snap-இல் கூடப் பயன்படுத்தலாம். அவர்கள் 'இந்தப் பாடலைப் பிளே செய்க' என்பதைத் தட்டி கூட்டாளர் ஸ்ட்ரீமிங் தளங்களில் முழுப் பாடலையும் கேட்டு ரசிக்கலாம். 
உங்களின் Snapகளில் இசையைச் சேர்க்கவும்
வளர்ந்துவரும் மற்றும் பிரபலமான கலைஞர்களின் சிறப்பான இசை பட்டியலிலிருந்து Snapchat பயனர்கள் அவர்களின் Snapகளில் பாடல்களைச் சேர்க்கலாம் (பதிவு செய்வதற்கு முன்பு அல்லது பின்பு), பல்வேறு பதிவு லேபிள்கள் மற்றும் வெளியீட்டாளர்களுடனான எங்களின் கூட்டணிக்குத் தான் நன்றி கூற வேண்டும். 
உங்களின் Snap-இல் பாடலை சேர்க்க…
  1. கேமரா திரையைத் திறக்கவும்
  2. ஒலிகள் படவுருவைத் 🎵 தட்டவும்
  3. தேர்ந்தெடுக்கப்பட்ட இசைப்பட்டியலிருந்து ஒரு பாடலை தேர்வு செய்யவும், அல்லது ஒரு குறிப்பிட்ட பாட்டைத் தேடவும். முன்னோட்டத்திற்காகப் பிளே பொத்தானைத் தட்டவும்.
  4. பாடல் எங்குத் தொடங்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்
  5. அது உங்களின் விருப்பம் போல் தான் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள அதை மீண்டும் பிளே செய்யவும்
அசல் ஒலிகள்
Snapchat -இல் ஆக்கப்பூர்வமாதல் என்றால், உங்களின் தனித்துவமான குரலை வெளிப்படுத்துவதாகும், எனவே உங்களின் சொந்த ஒலிகளையும் உங்களால் உருவாக்க முடியும்.
உங்களின் Snap-இல் சேர்ப்பதற்காக உங்களின் சொந்த அசல் ஒலியை உருவாக்க...
  1. கேமரா திரையைத் திறக்கவும்
  2. ஒலிகள் படவுருவைத் 🎵 தட்டவும்
  3. 'ஒலியை உருவாக்குக' என்பதைத் தட்டவும்
  4. 60 விநாடிகள் வரை பதிவு செய்ய ஒலிவாங்கி பொத்தானைத் தட்டவும், பின்னர்ப் பதிவு செய்வதை நிறுத்த அதை மீண்டும் தட்டவும்
  5. உங்களின் அசல் ஒலிக்குப் பெயரிடவும்
  6. ஒலியைப் பொதுவானதாக்க வேண்டுமா என்பதைத் தேர்வு செய்யவும், நீங்கள் விரும்பும் நீளத்திற்கு ஆடியோவை நேர்த்தியாக்கவும்
  7. 'ஒலியைச் சேமிக்கவும்' என்பதைத் தட்டவும்
Snap பிரபலமாபவை
ஸ்பாட்லைட்டில் படிமுறை சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றய தினத்தின் மிகவும் பிரபலமான ஒலிகளின் பட்டியலைப் பார்க்கவும்!
மிகவும் வெற்றிகரமான Snapகளை உருவாக்க இந்த டேபைப் பயன்படுத்தவும்.
Snapchat-இல் உங்களின் ஒலிகளைப் பெற்றிடுங்கள்
இசை படைப்பாளர்கள் அவர்களின் சொந்த அசல் பாடல்களை எங்களின் நூலகத்தில் சேர்க்க நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதைச் செய்வதற்கு இரண்டு முதன்மையான வழிகள் உள்ளன:
  • கையொப்பமிட்ட கலைஞர்கள் உங்களின் பதிவு லேபிளில் பணியாற்றக்கூடும்
  • சுயாதீன கலைஞர்கள் அசல் இசையை உருவாக்க Voisey செயலியைப் பயன்படுத்தலாம் அல்லது அவர்களின் இசையைப் பகிர Snap -இன் கூட்டாளர் DistroKid-ஐ பயன்படுத்தலாம்.
உங்களின் Snap-களில் ஆடியோவை ஊக்குவிக்க பிரபலமடையும் #Topics பயன்படுத்தி உங்களின் கதை மற்றும் ஸ்பாட்லைட்டில் Snapகளைத் தவறாமல் பதிவு செய்யவும்.