தொகுப்பாக்கம் செய்யும் கருவிகள்
சிறப்பான Snapகளை உருவாக்க இன்னும் அதிகமான வழிகளை ஆராயுங்கள்.
Snap எடுக்கப்பட்டதற்குப் பிந்தைய வடிகட்டிகள்
நீங்கள் உங்களின் Snap-ஐ எடுத்ததும், புது வண்ணம் மற்றும் டெக்ஸ்சர்களைச் சேர்க்கும் நல்ல பிரேம் லென்ஸஸ் மற்றும் வடிகட்டிகளைக் கண்டுபிடிக்க வலது பக்கம் ஸ்வைப் செய்யவும். மறக்க வேண்டாம், உங்களின் கேமரா சுருளிலிருந்து நீங்கள் பதிவேற்றம் செய்த புகைப்படங்கள்/வீடியோக்களில் இந்த எஃபெக்ட்களையும் நீங்கள் சேர்க்கலாம்.
பின்னணிகளுடன் படவிளக்கங்கள்
பல்வேறு பின்னணியுடன் உங்களின் படவிளக்கங்களைச் சுவாரஸ்யமாக்கவும்! 
நிபுணர் குறிப்பு: பின்னணிகளுடன் படவிளக்கங்களைச் சேர்க்கும்போது நல்ல வண்ண வேறுபாட்டைத் தேடவும். 
#தலைப்புகள்
பல பார்வையாளர்களை ஈர்க்கவும் அதே போன்ற Snapகளைக் கண்டுபிடிக்க Snapchatters -க்கு உதவவும் டிரெண்டிங்கில் உள்ள #தலைப்பை ஸ்பாட்லைட்டில் பயன்படுத்தவும்.
தானாகத் தோன்றும் தலைப்புகள்
தானாகத் தோன்றும் தலைப்புகளுடன் உள்ள ஒரு வார்த்தையை உங்களின் பார்வையாளர்கள் ஒருபோதும் கவனிக்கத் தவறமாட்டார்கள் என்பதை உறுதி செய்யவும். இயக்கப்பட்டதும், இந்தக் கருவி உங்களின் வார்த்தைகளைத் தானாகவே படியெடுக்கும், எனவே பார்வையாளர்கள் உங்களின் Snapகளை ஒலியுடனும் ஒலி இல்லாமலும் பார்க்கலாம். எழுத்துரு பாணியையும், உங்களின் Snapகளுக்குள் அவை வைக்கப்படும் இடத்தையும் நீங்கள் சரிசெய்யலாம். 
தொழில் வல்லுநரின் உதவிக்குறிப்பு: விருப்பத்தேர்வு சார்ந்த ஆடியோவைக் கொண்டுள்ள வீடியோக்கள் வழக்கமாகச் சராசரியை விட நீளமான ப்ளேபாக் நேரத்தைக் கொண்டிருக்கிறது.
நேரம்-அடிப்படையிலான படவிளக்கங்கள்
நேரக்கணிப்பு என்பது தான் எல்லாம். உரையைச் சேர்க்கத் திரையைத் தட்டவும், உங்களின் எழுத்துருவைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் உங்கள் Snap-இல் உள்ள படவிளக்கத்தின் கால அளவை சரி செய்ய உங்கள் திரையின் மேலே உள்ள ஸ்டாப்வாட்ச் படவுருவைத் தட்டவும். 
வரைபடம் (டூடுல்)
படம் வரைதல் என்பது உங்களின் Snapகளுக்கு இன்னும் கூடுதல் தனித்தன்மையைச் சேர்க்க ஒரு சிறந்த வழியாகும். எமோஜிகள் அல்லது உரையைப் பயன்படுத்தவும், அல்லது திரை முழுவதும் உங்களின் விரலால் கிறுக்கவும். உங்களின் Snapchat வரைபடத்தை உருவாக்க நிறம் தேர்ந்தெடுப்பானை (ஒன்றின் மீது ஒன்றாக 3 வட்டங்கள்) தட்டவும்.