கேமரா கருவிகள்
நீங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிடித்துக்கொள்ளும் முறையை மாற்றுவதற்காக இந்த கருவிகளைப் பயன்படுத்தவும்.
லென்ஸஸ் பற்றி அறிந்துகொள்க
படைப்பாளர்கள் பயன்படுத்துவதற்காக, லென்ஸஸின் ஒரு மிகப்பெரிய நூலகம் எங்களிடம் உள்ளது. செயலியைத் திறந்தவுடனேயே கேமரா திரையிலிருந்து லென்ஸஸை எக்ஸ்ப்ளோர் செய்யவும். உங்களுக்கு விருப்பமான லென்ஸஸையும், என்ன பிரபலமாகி கொண்டிருக்கிறது என்பதையும் பார்க்க, வீடியோ எடுப்பதற்கான பொத்தானின் வலது பக்கத்தில் உள்ள ஸ்மைலி முகப் படவுருவை வெறுமனே தட்டவும்.
பரிந்துரைக்கப்பட்ட, பிரபலமாகி கொண்டிருக்கும், மற்றும் Snapchat மற்றும் அதன் சமூகத்தால் உருவாக்கப்பட்ட தீம் லென்ஸஸைப் பார்க்கக் கீழே வலதுபக்க மூலையில் உள்ள 'எக்ஸ்ப்ளோர்' என்பதைத் தட்டவும்.
நீங்களாகவே ஒரு லென்ஸை எப்படி உருவாக்குவது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? Lens Studio-க்கு செல்லவும்
கைகளால் தொடாமல் பதிவு செய்தல்
பாருங்கள், கைகளால் தொடவேண்டியதில்லை! ஆறு வீடியோக்கள் வரை, ஒவ்வொன்றும் பத்து விநாடிகள் என்ற நீளத்தில், 60 விநாடிகளுக்குப் பதிவு செய்யலாம்.
உங்களின் வீடியோவைப் பதிவு செய்ய, உங்கள் திரையின் கீழே உள்ள வீடியோ எடுக்கும் பொத்தானை அழுத்திப் பிடிக்கவும். பொத்தானுக்கு அருகில் ஒரு பூட்டு படவுரு தோன்றும். கைகளைப் பயன்படுத்தாமல் இருக்க, இடது பக்கம் ஸ்லைட் செய்து பூட்டவும். பின்னர் நீங்கள் உங்களின் விஷயத்தைச் செய்யலாம்!
மேலும், இது செல்ஃபி முறையிலும் வேலை செய்யும்.
கேமரா கருவித்தொகுதி
உங்களின் Snapகளை அற்புதமானதாக்குவதற்காகக் கேமரா திரையின் வலதுபுறத்தில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தவும். 
காலவரிசை. பல தருணங்களை ஒரு வீடியோவாக ஒன்றிணைக்கவும்.
ஒலிகள். எங்கள் உரிமம் பெற்ற இசை நூலகத்திலிருந்து ஒரு பாடல்தொகுப்பு அல்லது பரிந்துரைக்கப்பட்ட பாடலிலிருந்து தேர்ந்தெடுக்கவும் அல்லது நீங்களே சொந்தமாக உருவாக்கவும்.
பல Snap. உங்கள் பதிவின் நீளத்தை அமைக்கவும். பூட்டுவதற்காக, புகைப்படம் எடுக்கும் பொத்தானை அழுத்திப்பிடித்து இடது பக்கம் ஸ்லைட் செய்வதன் மூலம் நீங்கள் கைகளைப் பயன்படுத்தவேண்டிய தேவை இருக்காது. 
நேரக்கருவி. நீங்கள் ஒரு தோரணையில் நிற்பதற்காக ஒரு கவுண்ட்டவுனை ஆரம்பிக்கவும்.
ஃபோகஸ். டெப்த்-ஆஃப்-ஃபீல்டு எஃபக்ட்டுடன் முகத்தில் ஃபோகஸ் செய்யவும்.
3D. உங்கள் செல்ஃபியில் 3D எஃபக்ட்களைச் சேர்க்கவும். கண்ணோட்டத்தை மாற்ற உங்கள் தொலைபேசியை நகர்த்தவும்.
கட்டம். உங்களின் ஷாட்களை வரிசைப்படுத்துங்கள், எனவே, நீங்கள் ஃபோகஸ் செய்யலாம், ஸ்னாப் எடுக்கலாம், மற்றும் அவற்றை அனுப்பலாம்.
காலவரிசை பதிவு செய்தல்
இது, கேமரா கருவித்தொகுப்பில் எங்களின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும். பல க்ளிப்களைப் பதிவு செய்து, நேர்த்தியாக்கி, அவற்றை ஒன்றிணைக்கவும், மற்றும் உங்களின் வீடியோவுக்குச் சரியான படவிளக்கங்களைச் சேர்க்கவும். நீங்கள் ஒலிகளையும் சேர்க்கலாம்.