சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது: ஸ்பாட்லைட்டில் பணம் வெல்வதற்கான ஒரு புதிய வழி அறிவிக்கப்படுகிறது

Snap குழுவால்

புதன்கிழமை, 06 அக்டோபர் 2021 06:00 அன்று

எங்களின் சமூகத்திற்கு அவர்களின் படைப்பாற்றலுக்காக வெகுமதி அளித்து, உள்ளடக்க உருவாக்கத்தை அனைவருக்குமானதாக்குவதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், இதன்மூலம், யார் வேண்டுமானாலும் கவனம் பெறும் ஒரு இடமாக ஸ்பாட்லைட் இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
படைப்பாளர்கள் வெகுமதி பெறுவதற்கான ஒரு புதிய வழியை அறிவிக்கிறோம்: ஸ்பாட்லைட் சவால்கள்!
குறிப்பிட்ட லென்ஸஸ், ஒலிகள், அல்லது #தலைப்புகளைப் பயன்படுத்திச் சிறப்பாகச் செயல்படும் ஸ்பாட்லைட் Snapகளை உருவாக்கியதற்காகப் பணப் பரிசுகளை வெல்ல Snapchat பயனர்களுக்கு ஸ்பாட்லைட் சவால்கள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அது உங்களின் சிறந்த விளையாட்டு தந்திரமாக இருக்கலாம் அல்லது உங்களின் வேடிக்கையான செயலாக இருந்தாலும், சாம்பியன் Snapchat பயனர்கள் அவர்களின் தனித்துவமான குரல், கண்ணோட்டம், தனித்தன்மை மற்றும் படைப்பாற்றலை முதன்மையாக்கும் Snapகளை உருவாக்க இவை சவால் விடுகிறது.
அமெரிக்காவில் உள்ள 16+ வயது Snapchat பயனர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து ஸ்பாட்லைட் சவால்கள் பயன்பாட்டிற்கு வரும், அதைத் தொடர்ந்து வரும் மாதங்களில் அதிகச் சந்தைகளில் வரவுள்ளன. 
ஒவ்வொரு ஸ்பாட்லைட் சவாலுக்கும் கிடைக்கும் மொத்த பரிசு தொகையில் ஒரு பங்கை Snapchat பயனர்கள் வெல்லலாம், அந்த தொகையானது பொதுவாக $1k முதல் $25k வரை என்ற அளவில் இருக்கும், இருப்பினும் அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட சவாலுக்காக அதிக அளவு தொகையை நாங்கள் கிடைக்கச்செய்யக்கூடும். ஒரு ஸ்பாட்லைட் சவாலில் ஒரு Snapchat பயனர் வெல்லக்கூடிய குறைந்தபட்சத் தொகை $250 USD ஆகும்!
பங்கேற்பதற்கு, Snapchat-இல் உள்ள ஸ்பாட்லைட்டின் மேலே வலது மூலையில் உள்ள டிரெண்டிங் குறியீட்டின் மூலம் அணுகப்படும் டிரெண்டிங் பக்கத்திற்குச் செல்லவும். நீங்கள் பங்கேற்க விரும்பும் சவாலின் பக்கத்தைப் பார்க்க அந்தச் சவாலைத் தேர்ந்தெடுக்கவும், இதில் சவால் பற்றிய விவரம் மற்றும் சமூகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளீடுகள் இடம்பெறும். கிடைக்கக்கூடிய பரிசுகள் மற்றும் சமர்ப்பிப்பு காலக்கெடு போன்ற குறிப்பிட்ட சவால் குறித்த கூடுதல் விவரங்களுக்காக "சவால் விவரங்கள்" என்பதைத் தட்டவும். Snapchat கேமராவைத் திறப்பதற்குக் கேமரா படவுருவைத் தட்டவும். உருவாக்கி சமர்ப்பிக்கவும்!
ஒவ்வொரு சவாலுக்கும், தகுதியான, பொருத்தமான மற்றும் அதிகமாகப் பார்க்கப்பட்ட சமர்ப்பிப்புகள் பின்வரும் வரைகூறுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும்: படைப்பாற்றல் மற்றும் அசல் தன்மை, Snap ஆக்கப்பூர்வக் கருவிகளின் புதுமையான பயன்பாடு, தனித்துவமான POV, மற்றும் பொழுதுபோக்கு மதிப்பு. பொதுவாக, ஒவ்வொரு சவாலிலும் சராசரியாக 3 முதல் 5 வெற்றியாளர்கள் இருப்பார்கள், இருப்பினும் அவ்வப்போது அதிகமான அல்லது குறைவான வெற்றியாளர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கக்கூடும் (16+ வயது மற்றும் 50 U.S./D.C.-இல் வசிப்பவராக இருக்க வேண்டும், அதிகாரப்பூர்வ விதிகள் பொருந்தும்).
நீங்கள் உருவாக்கவுள்ளதைப் பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம்! 
மீண்டும் வலைப்பதிவிற்குச் செல்லவும்