ஸ்பாட்லைட்டில் படைப்பாற்றலுக்கு வெகுமதியளிக்கிறோம்: சிறந்த Snapகள் மீது கவனத்தைத் திருப்புகிறோம்

Snap குழுவால்

திங்கட்கிழமை, 23 நவம்பர் 2020 13:59 அன்று

ஸ்பாட்லைட், Snapchat சமூகத்தால் உருவாக்கப்பட்ட அதிகம் மகிழ்விக்கும் Snapகள் மீது, அவற்றை யார் உருவாக்குகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவற்றின் மீது கவனத்தைத் திருப்புகிறது. பொதுக் கணக்கு அல்லது செல்வாக்கு மிக்க பின்தொடரலின் தேவை இல்லாமல் - யாருடைய உள்ளடக்கமும் அதிக கவனத்தைப் பெறக்கூடிய இடமாக நாங்கள் ஸ்பாட்லைட்டை உருவாக்கியுள்ளோம். அது Snapchat பயனர்கள் தங்கள் சிறந்த Snapகளைப் பகிர்ந்து Snapchat சமூகம் முழுவதிலும் இருந்து கண்ணோட்டங்களைப் பெற ஒரு நியாயமான மற்றும் கேளிக்கை மிகுந்த இடமாகும்.

எங்களின் பரிந்துரைகள்

எங்கள் உள்ளடக்கப் கணிப்புநெறிமுறைகள் உங்களுக்கு விருப்பமான அதிகம் ஈர்க்கக்கூடிய Snapகளை வெளிப்படுத்தச் செயல்படுகின்றன. சரியான Snapகளை சரியான நபருக்குச் சரியான நேரத்தில் வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். உங்கள் தனிப்பட்ட விருப்பங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் இதை நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம்.

எங்கள் தரவரிசை கணிப்பு நெறிமுறை ஒரு குறிப்பிட்ட Snap மீது மக்கள் ஆர்வம் செலுத்துவதைக் காட்டும் காரணிகளைப் பார்க்கிறது: அதாவது அதைப் பார்க்கச் செலவழித்த நேரம், அது பிடித்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா, அது நண்பர்களுடன் பகிரப்பட்டதா என்பதையெல்லாம் பார்க்கிறது. அது, பார்ப்பவர் அந்த Snap-ஐப் பார்ப்பதை விரைவாகத் தவிர்த்தாரா என்பது உள்ளிட்ட எதிர்மறை காரணிகளையும் கருத்தில் கொள்கிறது. ஸ்பாட்லைட்டில் தோன்றும் Snapகள் தனிப்பட்ட, தனிநபர் கணக்குகளை வைத்துள்ள Snapchat பயனர்களுடையதாக அல்லது பொது தகவல் பக்கங்கள் மற்றும் மில்லியன் கணக்கான சந்தாதாரர்களை வைத்துள்ள Snap நட்சத்திரங்களுடையதாக இருக்கலாம்.

புதிய வகை பொழுதுபோக்குகளை வெளிப்படுத்துதல்

Snapchat பயனர்கள் விரும்பக்கூடிய புதிய வகை உள்ளடக்கங்களை வெளிப்படுத்தவும், எக்கோ சேம்பர்களின் தாக்கத்தைத் தனிக்கவும், ஸ்பாட்லைட் அனுபவத்தில் நேரடியாக பன்முகத்தன்மையை உருவாக்கியுள்ளோம். எங்கள் கணிப்பு நெறிமுறைகள் மாறுபட்ட விளைவுகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்த நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.

பலவிதமான பயிற்சி தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தி எங்கள் கணிப்பு நெறிமுறை மாதிரிகளை உருவாக்குவதன் மூலமும், சார்பு மற்றும் பாகுபாடுகளுக்கான எங்கள் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலமும் உட்பட சில வழிகளில் நாங்கள் அதைச் செய்கிறோம். ஸ்பாட்லைட்டில் நீங்கள் புதிய மற்றும் பலதரப்பட்ட பொழுதுபோக்குகளைக் காண்பதை உறுதிசெய்ய "தேடல்" இயக்கமுறைகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த அணுகுமுறையானது பார்வைகளை நியாயமான முறையில் பரந்த அளவிலான படைப்பாளிகளின் குழுவிற்கு வழங்குகிறது. மேலும், பன்முகத்தன்மை மற்றும் வெவ்வேறு பார்வைகளைச் சேர்ப்பது அவற்றின் சொந்த செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை இது எங்கள் கணிப்பு நெறிமுறை மாதிரிகளுக்குக் கற்பிக்கிறது.

எடுத்துக்காட்டாக, ஸ்பாட்லைட்டில் உங்களுக்கு நாய்கள் பிடிக்கும் என்பதை நீங்கள் எங்களுக்குக் காண்பித்தால் நீங்கள் அனுபவித்து மகிழ நாங்கள் உங்களுக்குப் பொழுதுபோக்கான நாய்க்குட்டி Snapகளை வழங்க விரும்புகிறோம்! ஆனால், இயற்கையில் கவனம் செலுத்தும் படைப்பாளிகள், பயணத்தைப் பற்றிய வீடியோக்கள் அல்லது பிற விலங்குகள் போன்ற பிற வகையான உள்ளடக்கம், பிற படைப்பாளிகள் மற்றும் பிற ஆர்வமுள்ள பகுதிகளை நாங்கள் உங்களுக்காக வெளிப்படுத்துகிறோம் என்பதையும் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

படைப்பாற்றலுக்கு வெகுமதி அளித்தல்

படைப்பாற்றலுக்கு நியாயமான மற்றும் கேளிக்கையான வழியில் வெகுமதி அளிக்க ஸ்பாட்லைட் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும், Snapchat பயனர்களுக்கு நாங்கள் ஒரு மாதத்திற்கு மில்லியன் கணக்கான தொகையைப் பகிர்ந்தளிக்கிறோம். Snapchat பயனர்கள் 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருக்கவேண்டும் மற்றும் எங்கு பொருந்துமோ வெகுமதியை ஈட்டுவதற்குப் பெற்றோர் அனுமதி பெறவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட நாளில், பிற Snapகளின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது, (பசிபிக் நேரத்தைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகிறது) ஒரு Snap பெறும் தனிப்பட்ட வீடியோ பார்வைகளின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் Snapchat பயனர்களுக்கு வெகுமதி அளிக்கும் தனியுரிம கணக்கீட்டு முறை மூலம் ஈட்டப்பட்ட வெகுமதிகள் தீர்மானிக்கப்படும். பல Snapchat பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஈட்டுவார்கள். அந்தக் குழுவில் சிறந்த Snapகளை உருவாக்குபவர்கள் அவர்களின் படைப்பாற்றலுக்காக அதிகம் ஈட்டுவார்கள். Snap-களுடனான உண்மையான ஈடுபாட்டை மட்டுமே நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம் என்பதை உறுதிப்படுத்த மோசடி நடக்கிறதா என்று நாங்கள் தீவிரமாகக் கண்காணிக்கிறோம். எங்கள் கணக்கீட்டு முறை அவ்வப்போது சரிசெய்யப்படலாம்.

ஸ்பாட்லைட்டில் தோன்ற, அனைத்து Snap-களும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும், இது தவறான தகவல்கள் (சதி கோட்பாடுகள் உட்பட), தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம், வெறுப்பைத் தூண்டும் பேச்சு, பாலியல் ரீதியாக வெளிப்படையான அல்லது கேவலமான உள்ளடக்கம், கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல், வன்முறை மற்றும் பலவற்றைப் பரப்புவதைத் தடை செய்கிறது. மேலும், ஸ்பாட்லைட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் Snap-கள் எங்கள் ஸ்பாட்லைட் வழிகாட்டுதல்கள், சேவை விதிமுறைகள் மற்றும் ஸ்பாட்லைட் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

மீண்டும் வலைப்பதிவிற்குச் செல்லவும்